நமது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் தற்போது சராசரியாக 1300 தெருவிளக்குகள் உள்ளன.( கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது) கிராமத்து வீதிகளை ஒளியூட்ட தெருவிளக்குகளை பொருத்துதல்,பராமரித்தல் மற்றும் நடாத்துதல் ஆகிய செயல்பாடுகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்றன.
மின்கம்பங்கள் மஞ்சள் நிறத்தில் இலக்கமிடப்பட்டிருப்பதுடன் புதிதாக தெருவிளக்குகளுக்கு புதியஅட்டை முறைமையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.மேலும் ,தெருவிளக்குகள் செயல்படாமை சம்பந்தமான முறைப்பாடுகளுக்காக கீழ் காணப்படும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும். அதன் பிறகு உரிய இலக்கமிடப்பட்ட மின்கம்ப விபரம் மின் தொழினுட்பவியலாளருக்கு அறிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தெருவிளக்கு செயல்படாமையை அறிவிக்கும் விண்ணப்பப் படிவம்