ஒற்றுமையான அரசியலை அடிப்படையாகக் கொண்ட திக்வெல்ல பிரதேச சபையின் இவ்விணையத்தளம் நமக்கும் குடிமக்களுக்கும் இடையிலான சிறந்ததொரு தொடர்பை கட்டி எழுப்பவும், பொறுப்பானதொரு நல்லாட்சியின் குணாம்சங்களை மேம்படுத்தவும் உதவும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் அவற்றை நாம் மதிக்கிறோம். உங்களது பெறுமதியான கருத்துக்கள்/ ஆலோசனைகள் அனைத்தையும் நல்ல நோக்கத்துடன் நாம் வழங்கும் சேவைகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காகவே உபயோகித்துக் கொள்கிறோம்.நாம் நமது சேவைகளை மிகச் சிறப்பாக வழங்குவதாகவே எண்ணுகிறோம். ஆயினும் அவற்றை மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் நம்புகிறோம்.நமது சேவைகளை மேம்படுத்திக் கொள்ள இவ்விணையத் தளத்திடாக வெளிப்படுத்தப்படும் உங்கள் கருத்துக்கள் பாரியதொரு சேவையை ஆற்றும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இது நாம் செய்யும் சேவைகளைப் பறை சாற்ற/ பற்றி பெருமை அடித்து கொள்ள உபயோகித்துக் கொள்ளும் ஒரு இணையத்தளம் அல்ல.இது நமது குடிமக்களுக்கு நாம் செய்யும் மற்றும் எதிர்காலத்தில் செய்வதற்கு எதிர்பார்க்கும் விடயங்கள் பற்றி தெரிவிப்பதை இலக்காக கொண்ட ஒரு இணையத்தளம் மட்டுமே.இது சம்பந்தமாக உங்களது கருத்துக்களை தெரிவிப்பது பிரதேச சபையின் குடிமக்களான உங்கள் உரிமையாகும்.நாம் அவற்றை மதிக்கிறோம். உங்களது கருத்துக்கள் எதுவாயினும் அவை நமக்கு பெறுமதியானவையாகும்.திக்வல்ல மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்த நீங்கள் இணையதளத்தின் உச்ச பட்ச பயனை பெற்றுக் கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். அதேபோல், நமது இவ்விணையத்தளத்தை மேம்படுத்த உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு உங்கள் பணிவான சேவகன்
கித்சர முதுகுமாரண
தலைவர்,
திக்வெல்ல பிரதேச சபை.